புதுச்சேரியில் 2024-ல் 2 தேர்தல் வர வாய்ப்பு; முதல்வர் ரங்கசாமி விழிப்புடன் இருக்க அதிமுக வலியுறுத்தல்.!
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் எடப்பாடியார் கொண்டு வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழரை சதவீதம் உள்ஒதுக்கீடு போன்று புதுச்சேரியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10% உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான அனுமதியை மத்திய அரசு காலத்தோடு வழங்காததால் குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு துவங்கவில்லை. மேலும் புதுச்சேரி அரசும் பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு 10 தரவரிசைக்கான கலாந்தாய்வை அறிவித்து சென்டாக் கலந்தாய்வு மூலம் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை முடிவு செய்யப்பட்டது இந்நிலையில் சென்டாக் கலந்தாய்வு குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் முதலமைச்சர் அவர்கள் சென்டாக் கவுன்சிலுக்கான கால நீட்டிப்பை வழங்க வேண்டும் என கேட்டு மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதினார். செப்டம்பர் 30-ம் தேதிக்கு பிறகு நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் கடந்த முறை போல் காலம் கடந்த மாணவர் சேர்க்கையை மருத்துவ கவுன்சில் அங்கீகரிப்பதில் ஏற்பட்ட பாதிப்பை போன்று தற்போதும் பாதிப்பு ஏற்படுமா என்ற குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் டெல்லி சென்று.இதற்கான அனுமதியை அனுமதியை பெற்று வர வேண்டும். அனைத்து விஷயங்களிலும் அவசரம் காட்டும் தலைமை செயலாளர் இந்த. விவகாரத்தில் ஏன் மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் எழுதவில்லை ஏற்கனவே ஒரு முறை மத்திய மருத்துவ கவுன்சில் அறிவித்த அட்டவணைக்குள் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தாததால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் நீதிமன்றம் சென்றனர். இதே போன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சரும், துணைநிலை ஆளுநரும் நேரடியாக டெல்லி சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சந்திர பிரியங்கா விவகாரத்தில் அதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒரு அமைச்சரை நீக்குவதற்கும், சேர்ப்பதற்கும் முதலமைச்சருக்கு உரிமை உண்டு. ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஜனாதிபதியின் அனுமதியும் தேவையில்லை.
ஒரு அமைச்சரை நீக்க அனுமதி வழங்குவதற்கு முதலமைச்சரும், துணைநிலை ஆளுநருமே போதும்.
கடந்த காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த திரு கண்ணன் அவர்களை அப்போதைய முதல்வர் நீக்கம் செய்து அதற்கு அப்போதைய துணை ஆளுநர் உடனடியாக அரை மணி நேரத்தில் அனுமதி வழங்கினார்.
ஒருவேலை மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒரே கடிதத்தில் அமைச்சர் நீக்கம் செய்தும், அதே கடிதத்தில் புதிய அமைச்சர் சேர்த்தல் சம்பந்தமாக கடிதம் வழங்கியிருந்தால், அக்கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு துணைநிலை ஆளுநர் அனுப்பி இருப்பார் என நினைக்கிறேன். அவ்வாறு ஒரே கடிதத்தில் நீக்குதலும், சேர்த்தலும் குறிப்பிட்டிருந்து அக்கடிதத்தை துணைநிலை ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பியிருக்க கூடாது. அதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து, நீக்குதலும், சேர்த்தலும் தனி தனி கடிதமாக வழங்க முதலமைச்சரிடம் துணைநிலை ஆளுநர் தெரிவித்திருக்கலாம்.
எது எப்படி இருந்தாலும் அமைச்சர் நீக்கம் சம்பந்தமாக 15 நாட்களாகியும் குழப்பம் நீடிப்பதால், அமைச்சர் நீக்கம் என அரசிதழில் வெளியிடப்படாமல் இன்னமும் என்.ஆர் கூட்டணி அரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டே திட்டமிட்டு பாஜக இதில் நாடகம் ஆடுவதாக தெரிகிறது.
கூட்டணியில் இருந்து கொண்டே அமைச்சர் நீக்கம் விவகாரத்தில் பாஜகவினர் முதலமைச்சருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.
முதலமைச்சரின் இந்த முடிவுக்கு பாஜக எப்பொழுதும் துணை இருக்க வேண்டும். ஆனால் நீக்கம் செய்யப்பட்ட சந்தர்ப்பியங்காவிற்கு பாஜகவில் உள்ள ஒரு சிலர், அதாவது மத்திய அமைச்சராக உள்ளவரும், மாநில பாஜக அமைச்சராக உள்ள ஒருவரும் சந்திரபிரியங்காவின் அமைச்சர் பதவி நீக்கத்தை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செய்து வருகின்றன. இது நிச்சயமாக ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வழி வகை செய்ய வேண்டிய செயலாக இருக்கும்.
பாஜக எப்பொழுதும் தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை பலவீனப்படுத்தி அதன் மூலம் தனக்கு ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என பல மாநிலங்களில் நடைபெற்று வருவதாக கேள்விப்பட்டிருப்போம். அதே நிலை தற்போது புதுச்சேரியிலும் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். விழித்துகொள்வது நல்லது.
புதுச்சேரியில் கூட்டணி அரசில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டால் 2024 பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில கழக இணைச் செயலாளர் ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் நாகமணி, மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், உழவர்கரை நகர அவைத்தலைவர் டாக்டர். கணேஷ் ஆகியோர் இருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக