முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுற்றுலா பயணிகளின் வருகைக்காக, புதுச்சேரி மண்ணின் மைந்தர்களை வீட்டில் முடக்குவது நியாயம்தானா? அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் எந்த கனிமவளமும் இல்லை. மாநிலத்தின் வருவாய் பெருமளவு சுற்றுலாவை நம்பியே உள்ளது. சுற்றுலா வருமானத்தை தவிர்த்து புதுச்சேரி மாநில வருவாயை பெருக்க தொழிற்சாலைகள், சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களை திறக்க எந்த அடிப்படை பணிகளையும் செய்யவில்லை.கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சர் வெற்று விளம்பர அரசியல் செய்து வருகிறார். இதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரவேண்டும், அதன்மூலம் மாநிலத்தின் வருவாய் பெருக வேண்டும். இத்துடன் மற்ற துறைகளிலும் அரசு வருவாய் ஈட்ட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. இதற்காக முதலமைச்சரும், அமைச்சர்களும், அரசுத்துறை அதிகாரிகளும் இதுவரை மேற்கொண்டுள்ள அடிப்படை நடவடிக்கைகள் என்ன? எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருக்கும்போதே, தற்போது ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.

இவர்களுக்கு என்ன வசதிகளை புதுச்சேரி அரசு செய்து தந்துள்ளது? போக்குவரத்து நெரிசலை சரி செய்துள்ளதா? புதுச்சேரி சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதா? முக்கிய இடங்களில் பொது கழிப்பறை வசதி செய்துள்ளதா? வாகனங்களை நிறுத்த இட வசதி செய்யப் பட்டுள்ளதா? வார இறுதிநாட்களில் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளார்களா? சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வழிகாட்டுதல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா? நெரிசலை சீர்செய்ய நகர பகுதியில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதா? நெரிசல் மிகுந்த சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதா? வாகனங்களை முறையாக நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளதா? கனரக வாகனங்கள் பகல்நேரத்தில் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதா? புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் கண்காணிக்கப்படுகிறதா? விடுதிகளின் கட்டணம் முறைப்படுத்தப்பட்டுள்ளதா? வாடகை இருசக்கர வாகன நிலையங்கள் கண்காணிக்கப்படுகிறதா? சுற்றுலா பயணிகளுக்கு ஓட்டல்களில் வழங்கப்படும் உணவு பாதுகாப்பானதுதானா? இதை உணவு கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்கிறதா? பயணிகளின் உடல்நலன், உடைமைகளுக்கு தகுந்த பாதுகாப்பை புதுச்சேரி அரசு உறுதி செய்துள்ளதா?

இதுபோல புதுச்சேரிக்கு வரும் பயணிகளின் அடிப்படை வசதிகள், தேவைகள் எதையும் நிறைவேற்றாமல், சுற்றுலா வருவதற்கு அரசு அழைப்பு விடுக்கிறது. அரசின் வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் வார இறுதியில் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். திருமணம், மஞ்சள்நீர் போன்ற சுபநிகழ்ச்சி களில் பங்கேற்க செல்வதற்கு கூட தயங்குகின்றனர். இதே நிலை நீடித்தால், கோவாவிலிருந்து பூர்வகுடி மக்கள் புதிய கோவாவை உருவாக்கி சென்றதுபோல, புதுச்சேரி நகரை விட்டு விலகி, புதிய புதுச்சேரிக்கு மண்ணின் மைந்தர்கள் இடம்பெயரும் அபாயம் உள்ளது.

புதுச்சேரி மண்ணின் மைந்தர்களின் ஓட்டுகளை வாங்கி அரியணையில் வீற்றிருப்போர், பதவிக்கு வந்தவுடன் அவர்களின் உரிமைகளை காக்க தவறிவிட்டனர்.ரெஸ்டோபார் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை சுற்றுலா என்ற பெயரில் சுய லாப நோக்கோடு செயல்படுத்தி வருகின்றனர். இவர்களின் போலி அரசியல் நாடகத்தை புதுச்சேரி மக்கள் கண்டு வருகின்றனர். இதற்கு தக்க நேரத்தில், தக்க பாடத்தை புதுச்சேரி மண்ணின் மைந்தவர்கள் புகட்டுவார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...