புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10-ஆம் தேதி கவர்னர் உரையுடன் துவங்க உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி சட்டமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் செல்வம்,
புதுச்சேரி 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வரும் ஆகஸ்டு 10-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது என்றும், முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட் தாக்கல் செய்வார் என தெரிவித்தார்.
அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும் என்றும் காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி வருவதாக தெரிவித்த அவர்,
2012-க்கு பிறகு புதுவை கணக்கை முழுமையாக அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. இதற்காக தனி தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த பட்ஜெட்டில் செலவினங்களை சமர்பித்த பிறகுதான் அடுத்த பட்ஜெட்டில், துறைகளுக்கு நிதி ஒதுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், கணக்குகளை முழுமையாக ஒப்படைக்கும்போது மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிதி கிடைக்கும் என குறிப்பிட்டார்.
ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறோம் என்றும் 25 சதவீத அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் சட்டமன்றத்தில் பதாகைகள், பேனர் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது என்றும்,புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்ட டெல்லியை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக