உலகத்தின் முதல் நான் லைனர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் படத்திற்கு அசிஸ்ட் வேர்ல்ட் ரெகார்ட் சான்றிதழ் வழங்கப்பட்டது
உலகத்தில் முதல் முறையாக இரவின் நிழல் என்ற தமிழ் படம் நான் லைனர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தற்போது திரையரங்கை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அக்கிரா புரொடக்ஷன் தயாரிப்பில், நடிகரும் இயக்குனருமான, தேசிய விருதாளர் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வில்சன் செய்துள்ளார்.
இத்திரைப்படம் வெளியாகி பல்வேறு பரப்பினரடையும் வரவேற்பை பெற்றதோடு பல்வேறு சாதனையும் படைத்து வருகிறது.
இந்த நிலையில் அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனையில் இத்தரை படம் இடம் பிடித்துள்ளது.
புதுச்சேரி பிராவிடன்ஸ் மாலில் வெளியாகி உள்ள இரவின் நிழல் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களிடையே இயக்குனர் பார்த்திபன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அசிஸ்ட் வேல்ர்ட் ரெகார்ட் நிறுவனர் ராஜேந்திரன், இரவின் நிழல் படத்திற்காக அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழை, இயக்குனர் பார்த்திபனிடம் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி பிரகிடா சகா, இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இசை அமைப்பாளர் தேவ் குரு, சமூக சேவகர் ஓம் சக்தி ரமேஷ், உட்பட புதுச்சேரியை சேர்ந்த சினிமா கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நடிகர் பாண்டி செல்வம், புதுச்சேரி சினிமா லொகேஷன் மேனேஜர் குமரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக