முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுச்சேரியில் இரட்டைக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை மனு!

 காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பெறப்பட்ட தகவலின் படி ஆளுநர், பொதுப்பணித்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில்,

புதுச்சேரியில் அனைத்து உபயோகத்திற்கும் குடிநீரையே உபயோகப்படுத்தப் படுவதால் தினசரி நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால் செயல்பாட்டில் இருந்த ஆழ்துளை கிணறுகள் உப்பு கலந்து தரமற்ற குடிநீராக மாறிவிட்டதாக செய்திகள் வந்த நிலையில், இதுகுறித்து பொதுப்பணித்துறையில் RTI மூலம் தகவல்களாக கேட்டதற்கு அவர்கள்;

புதுச்சேரி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய 361 ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 25 ஆழ்துளை குழாய் கிணறுகள் உப்புத்தன்மை உள்ள நீராக மாறிவிட்டதாகவும், தினசரி குடிநீர் விநியோகத்திற்கு 109.1 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீர் எடுப்பதாகவும் தகவல் அளித்துள்ளனர்.

இதன்படி பார்க்கும்பட்சத்தில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் ஒரு நபருக்கு தினசரி சுமார் 150 லிட்டர் வீதம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவது தெரிகிறது.

சராசரியாக ஒரு நபருக்கு குடிக்க, சமைக்க பயன்படுத்தப்படும் நீர் 10 முதல் 20 லிட்டர் வரைதான். இந்நிலையில் மீதமுள்ள 130 லிட்டர் குடிநீர் குளிக்க, துணி துவைக்க, பாத்திரங்கள், வாகனங்கள் கழுவ, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற உபயோகத்திற்குத்தான் இந்த நீரை பயன்படுத்துகின்றனர். இதனால் தினசரி குடிநீர் பெருமளவு வீணடிக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி பொதுப்பணித்துறையினர் மூலம் 2015-ஆம் ஆண்டின் தகவலின்படி 30-க்கும் மேற்பட்ட இடங்களில் Water Purification Plant அமைத்து தினசரி 1.60 லட்சம் லிட்டர் விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் ஒரு லிட்டர் சுத்திகரிக்க 1.3லிட்டர் வீதம் 20 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது 300 அடிக்கும் மேல் ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இந்நிலையில் குடிக்க, சமைக்க மட்டுமின்றி அனைத்து பயன்பாட்டிற்கும் குடிநீரையே பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்படும்.

தற்போது விநியோகம் செய்யும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தாமல் ஏற்கனவே 361 ஆழ்துளை கிணறுகள் இருக்கும்போது, குடிநீர் பற்றாக்குறை என காரணம் கூறி மேன்மேலும் கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து புதுச்சேரியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.

தினசரி காலை, மதியம் இரவு என 10 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தை குறைக்க வேண்டும். இதுபோல் குடிப்பதற்கு உகந்த நீர், பிற உபயோகத்திற்கான நீர் என வெவ்வேறு நேரங்களில் மேலை நாடுகளில் உள்ளது போல் இரட்டை குடிநீர் வழங்கும் திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும்.

இதனால் தேவையின்றி குடிநீர் வீணாக்கப்படுவது, தவிர்க்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். குடிநீர் சிக்கனம், வீடு, வர்த்தக நிறுவனம், அலுவலகங்கள் ஆகியவற்றில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, நடைமுறைப் படுத்தும் பட்சத்தில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் .
எனவே இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...