இந்துக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சாரம் அவ்வை திடலில் நடைபெற்றது
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதைபூரி நகரில் கண்ணையா லால் என்பவரும், மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் உமேஷ் ஹொக்லே என்பவரும் பயங்கிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் சார்பில் சாரம் அவ்வை திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் இளங்கோ முன்னிலைவகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில சமூதாய நல்லிணக்க வட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் புதுச்சேரி செயலாளர் ரவிவர்மன், இணை செயலாளர் தினகரன், பொருளாளர் கோவிந்தன், பஞ்ரங்தள் பொறுப்பாளர் சதீஷ், புருஷோத்தமன்,ரவி அண்ணாமலை, கோ-ரக்ஷா இணை பொறுப்பாளர் குருசாமி, சமூதாய நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர் கருணாகரன், இணை ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், துர்கா வாகினி பொறுப்பாளர் திருமதி சரஸ்வதி, இணை பொறுப்பாளர் கோமளவல்லி, புனித யாத்திரைகள் பொறுப்பாளர் ஜவகர், மாவட்ட நிர்வாகிகள் சேகர், முத்து, ஜெயராமன், நந்தகுமார், சுபாஷ், சிவராஜ், சிவனடியார்கள் கூட்டமைப்பு சிவதிரு. ஆறுமுகம், ஸ்ரீ வில்வ சித்தர், சிவதிரு. சுந்திரசேகரனார், முதலானோர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக