முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி விழா

புதுச்சேரி கல்வே பங்களாவில் அமைந்துள்ள அருள்மிகு துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்


புதுச்சேரி காமராஜர் சாலை ஜெயராம் ஹோட்டல் எதிரே கல்வே பங்களாவில் அமைந்துள்ள அருள்மிகு துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து அம்மன் சிவ பெருமான் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் 
பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கடந்த 30 ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்

கருத்துகள்