உழவர்கரை தொகுதியில் ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர் மன்றத்தின் துவக்க விழா விமர்சையாக நடைபெற்றது
புதுச்சேரி உழவர் கரை பகுதியில் யாஷ் தலைமை ரசிகர் மன்றத்தின் ஒப்புதலோடு, மன்றத்தின் மூன்றாவது கிளை துவக்க விழா நடைபெற்றது.
மன்றத்தின் தலைவர் ஷர்மா தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைமை மன்றத்தின் நிர்வாக தலைமை அதிகாரி வருண், துணை செயல் அதிகாரி விக்ரமாதித்தன், மாநில தலைவர் அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தலைமை மன்றத்தின் பொறுப்பாளர்கள் உமா சங்கர், சீனிவாச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு மன்றத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில்,
பொதுச் செயலாளர் முகிலன், பொருளாளர் சுபாஷ், துணைத் தலைவர் சசிதரன், செயலாளர்கள் சங்கர் கணேஷ், மருது மற்றும் அருள், கிஷோர், பிரான்சிஸ், ஆனந்த்ராஜ் உட்பட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக