முதலியார்பேட்டை பகுதியில் ராக்கிங் ஸ்டார் யாஷ் தலைமை ரசிகர் மன்றத்தின் இரண்டாவது கிளையின் பெயர் பலகை திறப்பு விழா துணை செயல் அதிகாரி விக்ரமாதித்தன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது
புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியில் ராக்கிங் ஸ்டார் யாஷ் தலைமை ரசிகர் மன்றத்தின் இரண்டாவது கிளை துவக்க விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மன்றத்தின் துணை செயல் அதிகாரி விக்ரமாதித்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மன்றத்தின் செயல் அதிகாரி வருண், தலைவர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர் மன்ற பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக