குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க போகிறது.. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா களம் காண்கிறார்.இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
இதனையடுத்து கடந்த வாரம் புதுச்சேரி வந்த திரௌபதி முர்மு,முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் லட்சுமி நாராயணன்,துணை பொருப்பாளராக அமைச்சர் நமச்சிவாயம், வாக்குச்சாவடி ஏஜன்ட்டுகளாக சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், லட்சுமி காந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக