புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா. கடந்த 24 மணி நேரத்தில் 213 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி சார்ந்த 174 நபருக்கும், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தமாக 213 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 1048 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 1,68,487 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,65,477 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக