உப்பளம் தொகுதிக்குட்பட்ட 14 இடங்களில் செயல்படாத ஹைமாஸ் விளக்குகளை உடனடியாக சரி செய்து தருமாறு மின்துறை பிரிவு அதிகாரியை சந்தித்து கென்னடி எம்எல்ஏ வலியுறுத்தினார்
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிபால் கென்னடி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று ஓராண்டில் உப்பளம் தொகுதியில் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட சுமார் 14-கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஹை மாஸ் மற்றும் தெருவிளக்குகள் செயல்படாத நிலையில் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியை சந்தித்து தொகுதி மக்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனை அடுத்து, தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மின்துறை ஹா மாஸ் பிரிவு அதிகாரியை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் அதிகம் பயணிக்க கூடிய தொகுதி என்றும், ஹை மாஸ் விளக்குகள் எறியாததால் தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நிலவி வருகிறது என தெரிவித்த அவர், போர்க்கால அடிப்படையில் விரைந்து ஹைமாஸ் விளக்குகளை சரி செய்து தருமாறு வலியுறுத்தினார்.
சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியின் கோரிக்கையை ஏற்று 2 நாட்களில் ஹைமாஸ் விளக்குகள் சரி செய்து தரப்படும் என மின் துறை அதிகாரி உறுதியளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியின் துரித நடவடிக்கைக்கு உப்பளம் தொகுதி மக்களிடையே பெரும் பாராட்டும் வரவேற்பும் பெற்றுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக