புதுச்சேரி அதிமுக மாநில (மேற்கு) செயலாளர் ஓம்சக்திசேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டி அதனை காரணமாக கொண்டு தன்னை அரசியலில் முன்னிறுத்திக் கொள்ள சுய விளம்பரத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒரு போராட்டத்தை புதுச்சேரி மக்கள் புறந்தள்ளி மிக பெரிய தோல்வி அடைய செய்தது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகும். நான் ஏற்கனவே சொன்னது போல அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் பொது மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயக்கம் ஆகும். மாறாக ஒரு சிலரின் சுயநல அரசியல் காரணமாக கழகத்திற்கு அவ பெயரை ஏற்படுத்தும் முயற்சியை கழகத் தொண்டர்களால் தடுத்துள்ளோம். அஇஅதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் என ஒரு சிலர் அறிவித்தது முதலே இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு போராட்டத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நான் தொடர்ந்து கூறி வந்தேன். அதுபோலவே பொதுமக்கள் மத்தியிலும் கழகத் தொண்டர்கள் மத்தியிலும் உரிய வரவேற்பு கிடைக்காமல் இந்த போராட்டம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனதா கூட்டணியை மறைமுகமாக உடைக்க முயற்சி செய்த அரசியல் தில்லு முல்லு வியாபாரி எடப்பாடி அணி சூழ்ச்சி தகர்த்தெறியப்பட்டுள்ளது. மக்கள் நலனை புறந்தள்ளி சுய விளம்பர அரசியல் செய்யும் யாவருக்கும் இந்த முழு அறிவிப்பு போராட்டத் தோல்வி ஒரு மிகப்பெரிய பாடமாகும்.இந்த முழு அடைப்பு போராட்டம் தோல்வியடைய காரணமான காவல்துறையினருக்கும் மற்ற வியாபார பெருமக்களுக்கும் புதுச்சேரி மாநில அஇஅதிமுக சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக