அகில இந்திய காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது
அகில இந்திய காங்கிரஸ் கட்சி 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 138 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தினத்தை கொண்டாடும் வகையில்,புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் ஊடக பிரிவு சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவின் ஒரு பகுதியாக வண்ண அருவி ஓவிய கூடத்தில், மாபெரும் ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவரும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி ஊடக பிரிவு சேர்மான RE. சேகர் தலைமையில், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் திருவேங்கடம் முன்னிலையில் ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை தொகுதி இளைஞர் காங்கிரஸ் RM பிரபு, வட்டார காங்கிரஸ் பொது செயலாளர் ஹரிகிருஷ்ணன்,அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் ராஜேந்திரன், ஓவியர்கள் ராஜேஷ்,சக்தி நாதன் உட்பட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக