முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மீனவ சமுதாய மக்களுக்கு ஈமச்சடங்கு திட்டத்தை துவங்க வேண்டும்; அதிமுக கோரிக்கை..!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், Ex.Mla., வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்ற புரட்சித்தலைவரின் பாடல்போல புதுச்சேரி மாநில மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கண்ணீரில்தான் கடக்கிறது.மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான எந்தவித தொலைநோக்கு திட்டங்களையும் ஆளும் என்ஆர்.காங்கிரஸ் அரசு செய்யவில்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணம், முதியோர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட ஒவ்வொரு உரிமைகளையும் நீண்ட நெடும் போராட்டத்துக்கு பிறகுதான் பெற வேண்டிய கட்டாயத்திற்கு மீனவ சமுதாய மக்கள் ஆளாக்கப்படுகின்றனர்.

இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிச்சூடு, மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், இயற்கை சீற்றங்கள், இயற்கை பேரிடர்கள் என உயிரை பணயம் வைத்து மீனவ சமுதாயத்தினர் தொழில் செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட மீனவ சமுதாய மக்களை ஆளும் அரசு புறக்கணிப்பது சரியான அணுகுமுறை அல்ல. பிற சமூகத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மீனவ சமுதாய மக்களுக்கு அளிக்கப்படாதது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

அரசின் புறக்கணிப்பால் மீனவ சமுதாயத்தில் பல குடும்பத்தினர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்கின்றனர். அவர்களின் வழிகாட்டாத அரசு இறுதிசடங்கில்கூட பாரபட்சம் காட்டுவது மன்னிக்க முடியாதது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் பிற சமூகத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களின் ஈமச்சடங்கிற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி வழங்கப்படுகிறது. ஆனால் மீன்வளத்துறை மூலம் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தினர் இறந்தால் அவர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவி அளிக்கப்படுவதில்லை. இந்த பாரபட்சத்தை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. 

மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தினர் இறந்தால் அவர்களுக்கும் ஈமச்சடங்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவியாக வழங்க வேண்டும். இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...