முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடியற்காலை 5 மணிக்கு அன்பழகனை கைது செய்த போலிசார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :

புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனையை வலியுறுத்தி கழகத்தினுடைய கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் அனுமதியோடு மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையிலும் புதுச்சேரி மாநிலம் மத்திய அரசின் ஆளுமைக்கு கீழ் அடிமைப்பட்டு இருக்கின்றது.பிற மாநிலம் போன்று புதுச்சேரி மாநிலத்தில் எந்த அதிகாரமும் இல்லை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு பல் இல்லாத பாம்பு போன்று செயல்பட்டு வருகிறது.

 மற்ற மாநிலங்கள் போன்று புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் இல்லாததால் மாநிலத்தினுடைய வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எந்த முதலமைச்சராக இருந்தாலும் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து கோப்புகளுக்கு கையெழுத்து பெறும் அடிமை நிலையே தொடர்கிறது.

இது போன்ற சூழ்நிலையில் நம் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து என்பது அவசியமான ஒன்றாகும். அதற்காக இன்று நடைபெரும் பந்த் போராட்டத்தை ஆளும் அரசு திராவிட முன்னேற்றக் கழக துணையோடு அதிமுகவினரை காவல்துறையை வைத்து கைது செய்துள்ளனர்.

 விடியற்காலை 5 மணி அளவில் எஸ் டி எஃப் ஸ்பெஷல் போலீஸ் போர்ஸ் 30க்கும் மேற்பட்டவர்கள் தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி கைது செய்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சில திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் டிஜிபிஐ சந்தித்து நேற்றைய தினம் புகார் அளித்ததின் அடிப்படையில் என்னை இன்று கைது செய்துள்ளனர்.25 ஆண்டு கால புதுச்சேரி மாநில அரசியல் வரலாற்றில் பந்த் போராட்டத்திற்காக முன்னெச்சரிக்கையாக யாரும் இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவரும் கைது செய்யப்பட்டதில்லை. இந்நிலையில் திமுகவின் புகாரை அடுத்து அதிமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.நடப்பது என் ஆர் காங்கிரஸ் பிஜேபி அரசா அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி அரசா என்கின்ற சந்தேகம் எழுகிறது.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏவல் துறையாக புதுச்சேரி காவல்துறை அதிமுகவினரை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 நடைபெறும் இந்த பந்த் போராட்டத்தின் மூலம் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநில அந்தஸ்து சம்பந்தமான பிரச்சனையில் உண்மை முகம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.வெத்து அரசியலுக்காக மாநில அந்தஸ்து பற்றி பேசுகின்ற திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று எங்களது பந்த் போராட்டத்தை எதிர்த்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று அரசியல் அனாதையாக உள்ள ஓபிஎஸ் அணியினர் பந்த் இல்லை என்று விளம்பரம் வேறு கொடுத்திருந்தனர். பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வந்து போராட்டத்தை முறியடிப்போம் என்று சபதம் செய்தனர். பிஜேபி ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பந்த் நடத்த விட மாட்டோம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உண்மையில் கடந்த மூன்று தினங்களாக எங்களுக்கு எதிராக பேசியவர்கள் அனைவருமே எங்கள் பந்த்க்கு விளம்பரத்தை தேடி கொடுத்தனர்.

 புதுச்சேரி மாநிலத்திற்கு சம்பந்தமே இல்லாத பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்தில் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரால் அறிவிக்கப்பட்ட பல பந்த் போராட்டத்தை புதுச்சேரியில் இங்கு திமுக வினர் நடத்தினர். அப்போது இயக்கப்பட்ட பல பேருந்துகளை உடைத்தனர்.ஆனால் எந்த திமுகவினரையும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அதிமுக வினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

 புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் பிஜேபியுடன் திராவிட முன்னேற்ற கழகம் மறைமுக தொடர்பை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்கும் வேளையில் ஈடுபடும் திமுகவிற்கு பிஜேபி துணை நிற்பதாக தெரிகிறது.

 இவ்வளவு எதிர்ப்பு மீறி எங்களது அமைதியான பந்த் போராட்டத்திற்கு ஆதரவளித்த பஸ் ஓட்டுநர்கள் அதன் உரிமையாளர்கள் வர்த்தக வியாபார பெருமக்கள் சிறிய நடுத்தர கடை உரிமையாளர்கள், ஆட்டோ டெம்போ ஓட்டுநர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் ஓட்டல் உரிமையாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அதிமுக சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 மாநில உரிமையை மீட்டெடுக்கும் இந்த பிரச்சனையில் இதோடு நாங்கள் விட்டு விட மாட்டோம் மீண்டும் மக்களை திரட்டி தலைமை கழகத்தின் அனுமதி பெற்று தொடர் போராட்டங்களை அதிமுக நடத்தும். மத்திய அரசிடம் இருந்து அடிமைப்பட்டுக் கிடக்கும் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில உரிமையை பெற்றுத்தர அதிமுக தொடர்ந்து போராடும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...