முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன.!பாமக கேள்வி.?

புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


புதுவை ஆளுகின்ற என் ஆர் - பாஜக அரசு புதுவையில் காவல்துறை, புள்ளிவிவரத்துறை, தீயணைப்புத்துறை இப்படி பல அரசு பதவிகள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மறுத்த நிலையில், அதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மிகப்பெரும் போராட்டம் புதுவையில் அண்மையில் நடந்தது.

 இதற்குப் பிறகு புதுவையின் முதல்வர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் கலந்து ஆலோசித்து விரைவில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் 15 நாட்களாகியும் எந்த முடிவு எட்டப்படவில்லை. வேலைவாய்ப்பு தேர்வு செய்திகளும் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதுவை அரசு உடனடியாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள 11 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் .இது தவறும் பட்சத்தில் பாமக தலைமையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பயன்படும் வன்னியர், மீனவர், மருத்துவர், வண்ணார், குயவர்,இருளர், ஓட்டர், மருதநாயுடு நூக்கர், மித்ரா (யானம்) எழுத்தாக்கர்(மாகே) இப்படி 11 சமுதாயங்களை ஒருங்கிணைத்து , கிராம அளவில் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு மக்கள் போராட்டமாக மாறும். என்பதனை
அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். 

அரசு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டு மென புதுவை அரசை மீண்டும் ஒரு முறை பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அரசு மவுனம் காப்பது ஏன் இதற்கு தடையாக உள்ளவர்கள் , இட ஒதுக்கீடு முடியும் முடியாது என்பதனை எல்லாம் இந்த அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்... மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 11 சமுதாயங்களின் வாழ்வாதார பிரச்சனை இது .மேலும் 30 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிலை என்ன.. இந்த அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டி விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...