முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்பழகன் கருத்து அதிமுக கருத்து அல்ல.! வையாபுரி மணிகண்டன் பதிலடி.!

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அருமை அண்ணன் அன்பழகன் அவர்களுக்கு,

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, கண்ணின் இமைபோல தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் ரங்கசாமியை பாதுகாத்து பிரகாசமாக ஜொலிக்க வைக்கிறீர்களா?

இன்று தாங்கள் வைர கிரீடம் சூட்டும் முதலமைச்சர் ரங்கசாமி 2011ம் ஆண்டு தனிக்கட்சி தொடங்கி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தயவால் வெற்றி பெற்ற பின், வாக்களித்த மையின் தடம் மறையும் முன்னரே புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் செய்து, தனித்து ஆட்சி அமைத்ததை மறந்து விட்டீர்களா?

நீண்டகாலத்திற்கு பிறகு புதுச்சேரியில் அதிமுகவின் அமைச்சராகலாம் என தங்களுக்கு இருந்த கனவு குழிதோண்டி புதைக்கப்பட்டதையும் மறந்து விட்டீர்களா?

சரி, பழங்கதையை விடுங்கள். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு கூட்டணி கட்சி தலைவரான, தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு.ரங்கசாமி வரவில்லை என்பதையும் மறந்துவிட்டீர்களா?

 அதிமுக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் என்ஆர்.காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணியாற்றாமல், நம்மை வீழ்த்த பணியாற்றியதை மறந்து விட்டீர்களா?

நம் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வமான புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செவிமடுத்தும் கேட்காமல் முதலமைச்சர் த
ரங்கசாமி அலட்சியம் காட்டுவதை மறந்துவிட்டீர்களா?

கூட்டணி தர்மத்தை என்றும் மீறாத மாண்புமிகு.முதலமைச்சர், கூட்டணி ஆட்சி ஓராண்டு நிறைவு செய்தபோது நன்றி தெரிவித்து வெளியிட்ட விளம்பரத்தில், இதய தெய்வங்களான புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் படங்களையோ, மாண்புமிகு தமிழக எதிர்கட்சித்தலைவர், கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் அன்புக்குரிய அண்ணன் திரு.எடப்பாடியார் படத்தையோ, குறைந்தபட்சம் தங்களின் படத்தைக்கூட இடம்பெற செய்யாத தர்மத்தை மறந்துவிட்டீர்களா?

எனவே, சட்டமன்ற தேர்தல் முடிந்து 20 மாதங்களை கடந்த நிலையிலும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர், மாண்புமிகு தமிழக எதிர்கட்சித்தலைவர், அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்களை இன்றுவரை சந்தித்து குறைந்தபட்சம் நன்றியைக்கூட தெரிவிக்காத முதலமைச்சர் திரு.ரங்கசாமி அவர்களுக்கு ஆதரவாக நாள்தோறும் அறிக்கை விடுவதும், பேட்டிகள் அளிப்பதும், அன்பிற்கும், பாசத்திற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அண்ணன் திரு.அன்பழகன் அவர்களின் சொந்த கருத்தே.

புதுச்சேரி மாநில மக்களின் அக்கறையோடு செயல்பட்டு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர், மாண்புமிகு தமிழக எதிர்கட்சித்தலைவர், அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் வெளியிடும் கருத்துக்களே புதுச்சேரி அதிமுகவின் கருத்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது‌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...