முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் திமுக! பாஜக பரபரப்பு அறிக்கை...

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


புதுச்சேரியில் நேற்றைய தினம் எதிர்கட்சி தலைவர் சிவா MLA அவர்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறையை முற்றுகையிட்டு மக்களிடையே ஒரு மாயையை உருவாக்கியுள்ளார். மேலும் ரேஷன் கடை மூடுவதற்கு முக்கிய காரணம் NDA கூட்டணி அரசு என்று கூறியதை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு என்ன செய்தது என்பதை சிவா அவர்கள் மறந்துவிட்டு பேசிக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்திலும் அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்துவிட்டு இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் தான் கூட்டுறவுத்துறை, பொதுப்ணித்துறை மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

கடந்த கால ஆட்சியில் மூடுவிழா கண்ட பாப்ஸ்கோ தீபாவளி அங்காடி NDA கூட்டணி ஆட்சி அமைத்த உடனேயே தீபாவளி அங்காடி தொடங்கப்பட்டு மக்களுக்கு மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் AFT மில் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 7-வது சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தி கல்லூரியில் தினக்கூழி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் எந்தவித ஊழலும் செய்யாமல் நேர்மையான முறையில் காலியிடங்கள் நிரப்பபட்டது இது போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் இந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதை சிவா MLA தெரிந்து கொள்ளவேண்டும்.

கடந்த ஆட்சியில் வாய்மூடி கொண்டிருந்த எதிர்கட்சி தலைவர் இப்போது போலியான போராட்டங்களை மக்களை ஏமாற்றி நடத்திக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு மக்களிடையே பாஜக-வை பற்றிய தவறான தோற்றத்தை ஏற்படுத்துவது திமுக போன்ற கட்சிகளுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் அரசு, கொள்கையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக அரசை குறைகூற தகுதியற்றவர்கள் என்பதை உணர வேண்டும்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி அரசுகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு மேன்மேலும் மேன்மையடைந்து வருகின்றது. இதைபோன்று புதுச்சேரி மாநிலத்திலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இதோடு மட்டுமின்றி கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் கொண்டு சென்று அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன்.

கடந்த கால ஆட்சியில் முடங்கிப்போன மக்கள் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கனான பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நிறுவனங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் NDA கூட்டணி ஆட்சியில் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன.

எனவே NDA கூட்டணியை குறைகூறுவதற்கு எதிர்கட்சி தலைவருக்கு எந்தவித தகுதியும் இல்லை என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...