*முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் போர்கொடி தூக்கிய நிலையில் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது புதுச்சேரியில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
கடந்த சட்டமன்றத் கூட்டத்தில், முதலமைச்சர் ரங்கசாமி மீது பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் புகார் தெரிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன் தனது தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைப்பெற கூடாது என முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் என குற்றஞ்சாட்டிய, சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வலியுறுத்தி சட்டமன்ற வாயிலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அறிந்த, காலாப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், அங்காளனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஏ.கே.டி ஆறுமுகம் தலைமையில், சட்டப்பேரவையில் உள்ள அமைச்சர் லட்சுமி நாராயணன் அலுவலகத்தில் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆறுமுகம்,ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர், திருமுருகன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கூட்டத்தின் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமி விலக வலியுறுத்தி என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது புதுச்சேரி அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக