புதுச்சேரியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
புதுச்சேரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெட்டபாக்கம் - ஏரிக்கரை பகுதியை சேர்ந்த முதியவர் தாண்டவராயனை(70) பாகூர் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் தாண்டவராயனுக்கு (70) 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஷோபனா தேவி தீர்ப்பளித்தார்.மேலும்,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.
கருத்துகள்
கருத்துரையிடுக