முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொண்ட கும்பலால் வாலிபர் அடித்து கொலை..!

சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் டைல்ஸ்,சிமெண்ட் கற்களால் கொடுரமாக அடித்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்கி.(35). ஓரிரு மாதங்களில் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கான நடவடிக்கைகள் விக்கி மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த பகுதியில் ஒருவரின் மரண துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சவ ஊர்வலத்தில் விக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் விக்கிக்கும் வாய் தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல் அருகில் இருந்த டைல்ஸ் சிமெண்ட் உள்ளிட்ட பெரிய கற்களால் விக்கியை கொடுரமாக தாக்கியது. இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் தடுக்க முயன்ற போது அந்த கும்பல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனிடையே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூர்த்தியும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக விக்கி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை நடந்ததா என ஒதியஞ்சாலை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்ளனர்.

இதனிடையே,கொலை சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அதிமுக மாநில செயலாளரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு சென்று விக்கியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், உடனடியாக கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினார்.

கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே காவல்துறை சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கடற்கரை வாலிபால் போட்டி நடத்தப்பட்டு அதன் பரிசளிப்பு விழா இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் கொலை காரணமாக நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...