புதுச்சேரி மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ.5,500/- வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
மீன்பிடி தடைக்கால நிவாரணமானது நடப்பு ஆண்டிற்கு முதற்கட்டமாக 16917 மீனவ குடும்பங்களுக்கு ரூபாய் 9 கோடியே 30 லட்சத்து 43 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையினை மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியினை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேற்படி தொகையானது புதுச்சேரி பகுதியைச்சேர்ந்த 8287
குடும்பங்களுக்கும், காரைக்கால் பகுதியை சேர்ந்த 3265 குடும்பங்களுக்கும் மற்றும் ஏனாம் பகுதியைச்சேர்ந்த 4870 குடும்பங்களுக்கும் இன்று முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மாஹே பகுதியைச்சேர்ந்த 495 குடும்பங்களுக்கு இத்தொகையானது வரும் ஜூன் மாதம் முதல் தேதியில் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ்குமார், அனிபால் கென்னடி,கல்யாணசுந்தரம், தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், செந்தில்குமார் உட்பட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக