முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசின் முடிவிற்கு அதிமுக கண்டனம்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகளால் நாள்தோறும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு நகர பகுதி முழுவதும் உப்பு நீராக மாறிவிட்டது. குடிநீர் பற்றாக்குறையால் நகர பகுதிக்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டுவருவது என தெரியாமல் அரசு விழித்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் சுற்றுலா நகரமாக மாறி வருவதால் நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் பெருகி, தண்ணீர் தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்த அரசு, புதுச்சேரி மாநிலத்தில் மாசு ஏற்படுத்தும், நிலத்தடி நீரை உறிஞ்சும், மக்களுக்கு தீங்கு இழைக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி தரமாட்டோம் என சட்டசபையிலேயே வாக்குறுதி அளித்துள்ளது.

இத்தகைய சூழலில் புதுச்சேரியின் வருவாயை பெருக்குவதாக கூறி, சுமார் 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அரசின் கலால்துறையும் வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், நகர மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் பிரான்ஸ் நாட்டு உதவியை பெற்று, சுகாதார குடிநீர் திட்டத்தை ஒரு புறம் அரசு மேற்கொண்டுள்ளது. மறுபுறம் *நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி, புதுச்சேரி மாநிலத்தை பாலைவனமாக்கும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.* இந்த முரண்பாடான கொள்கைகளால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும். இதனை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.  

4 ஏக்கரில் அமைக்கப்பட வேண்டும் என்பதால், *புதிய மதுபான தொழிற்சாலைகள் அனைத்தும் கிராமப்புற பகுதிகளில்தான் அமையும். இதனால் விவசாய நிலங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவர்*. அரசுக்கு வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என கூறுவதும் பொய்யான தகவல்தான். புதுச்சேரியில் 5 மதுபான உற்பத்தி தொழிற்சாலை, ஒரு பீர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களில் 30 சதவீதம் மட்டுமே புதுச்சேரியில் விற்கப்படுகிறது. மற்ற 70 சதவீத மதுபானங்கள் வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசுக்கு, மதுபான தயாரிப்பு வரி மட்டுமே கிடைக்கிறது. மதுபானங்களின் விற்பனை கலால் வரி வேறு மாநிலங்களுக்கே செல்கிறது. இதே விதிகள்தான் புதிய தொழிற்சாலைகளுக்கும் விதிக்கப்படும். எனவே *வரி வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும் என்பதும் கண்துடைப்பு நாடகம்தான்.

புதிய ஆலைகளால், தாராள மது விற்பனையால் புதுச்சேரி இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாக சீரழியும் நிலைக்குத்தான் வழி வகுக்கும். பல குடும்பங்களை நிர்கதியாக நடுரோட்டில் நிற்க வைக்கும் அவலநிலை ஏற்படும். புதுச்சேரி தாய்மார்கள் கணவர்களை இழந்து விதவைகளாக மாறுவதால் மாநிலம் சுடுகாடாக மாறிவிடும். ஒரு சில தனி நபர்கள் மட்டுமே மதுபான தொழிற்சாலைகளால் ஆதாயம் அடைவார்கள். புதிதாக *மதுபான ஆலைகள் திறக்கும் விஷயத்தில் மவுனம் காக்கும் ஒரு சில அரசியல் கட்சி தலைவர்களை புதுச்சேரி மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.*

*புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு மேதகு துணைநிலை ஆளுநர் அவர்கள் அனுமதி வழங்கக்கூடாது.* இதுகுறித்து அதிமுக சார்பில் பசுமை தீர்ப்பாயம், பிரதமரின் நீர்நிலைகளை பாதுகாக்கும் பிரிவு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதிமுக சார்பில் புகார் செய்ய உள்ளோம். இதனையும் மீறி மதுபான தொழிற்சாலைகளை கொண்டுவர முயற்சித்தால், புதுச்சேரி மாநில மக்கள் சார்பில், கட்சித்தலைமை அனுமதி பெற்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மக்களை திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...