முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட முதியோர்,விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் ஆணையை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது
இதனை சிறப்பிக்கும் வகையில், புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட விதவை, முதியோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் உட்பட 76 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் அரசு ஆணை வழங்கும் விழா முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் அரசு ஆணையை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு சிகப்பு நிற குடும்ப அட்டை,50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் சமூக நலத்துறை மூலம் பார்வை இழந்த 2 பயனாளிகளுக்கு வானொலி பெட்டியை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், ஊழியர்கள், தொகுதி நிர்வாகிகள் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக