முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், சுமார் 35 லட்சம் செலவில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்
புதுச்சேரி நகராட்சி மூலம்,முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து,முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகர் தாழை வீதி, பெருமாள் கோயில் வீதி விரிவு, காட்டாமணி குப்பம் இணைப்பு சாலை உட்பட்ட பகுதிகளில், சுமார் 35 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்..
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா,இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் உட்பட தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக