முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வதந்திகளை நம்பாதீர்கள்! பிரகாஷ் குமார் எம்எல்ஏ விளக்கம்!

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 நமது புதுச்சேரி எழில்மிகு நகரம் அது தற்போது பொலிவுறும் நகரம் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற பகுதியில் குறிப்பாக முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகளை கடந்த ஆட்சிக்காலத்தில் மேதகு துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது. தற்போது சில மாற்றுக் கட்சியினர் மேற்படி சாராயம் மற்றும் கள்ளுக் கடைகளை நிறுவ நடவடிக்கை எடுத்து வருவதாக புரளியை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் வதந்தி ஆகும். இது சம்பந்தமாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  பிரகாஷ் குமார்  நேற்று 23/5/2022 அன்று  முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நேரில் சந்தித்து மீண்டும் சாராயக் கடைகள் மற்றும் கள்ளுக்கடைகளை முத்தியால்பேட்டை தொகுதிக்கு கொண்டுவரும் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்று  முதலமைச்சர் மாவட்ட ஆட்சியரை நேரில் அழைத்து மேற்படி முத்தியால்பேட்டை தொகுதியில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் வருவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆகவே முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் மாற்றுக் கட்சியினர் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்‌. மேலும் நமது முத்தியால்பேட்டை தொகுதியில் இனி ஒரு காலம் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் வரவே வராது அதற்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் உறுதி அளிக்கிறேன் என்று சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார்  உறுதியுடன் கூறினார்.

இரா.சரவணன்
9994033320

கருத்துகள்