நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் வில்லியனூர் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
நடிகர் கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சார்பில், கார்த்தி பிறந்தநாள் விழா வில்லியனூர் பகுதியில் கொண்டாடப்பட்டது.
மாநில கௌரவத் தலைவர் கலியபெருமாள் ஆலோசனைப்படி, இளைஞரணி தலைவர் ராஜேஷ் தலைமையில், வில்லியனூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பிரகாஷ், மன்றத்தின் நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக