புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் எதிர் வரும் 03-06-2022 வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணி அளவில் காரைக்காலில் உள்ள காமராஜர் நிர்வாக வளாகத்தில் மாண்புமிகு வேளாண் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் காரைக்கால் மாண்புமிகு மாவட்டத்தைச் போக்குவரத்து சார்ந்த துறை மாண்புமிகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக