புதுச்சேரி அரசு மின்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
திருபுவனை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை மதியம் 2 மணி முதல் மாலை 6 வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருபுவனை, சன்னியாசிகுப்பம், திருவண்டார்கோவில், கொத்தபுரிநத்தம், மதகடிப்பட்டு, நல்லூர்,குச்சிப்பாளையம்,கலித்தீர்த்தான்குப்பம்,ஆண்டியார்பாளையம், குச்சிப்பாளையம்,சிலுக்காரிப்பாளையம், திருபுவனைபாளையம் மற்றும் மதகடிப்பட்டு பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிள்ளைச்சாவடி மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை 07-06-2024 காலை 10 மணி முதல் 1 மணி வரை பிள்ளைச்சாவடி,சின்ன காலாப்பட்டு,V.C குடியிருப்பு, பெரிய காலாப்பட்டு, கனக செட்டிகுளம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக