அமேசானில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர்,புதிய லேப்டாப் வாங்க அமேசான் இணையதளத்தில் தேடி பார்த்து உள்ளார். அப்பொழுது ரூபாய் 1,15,000 மதிப்புள்ள லேப்டாப்பை ஆர்டர் செய்து பணத்தை அனுப்பி உள்ளார். 3 நாட்களுக்கு பிறகு அவருக்கு கொரியர் மூலம் லேப்டாப் வந்துள்ளது. அதனை பிரித்துப் பார்த்தபோது அவர் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள விலை குறைவான லேப்டாப் வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அமேசான் கஸ்டமர் கேர் மற்றும் புதுச்சேரி அமேசான் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்,இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,வாட்ஸ் அப், யூடியூப் போன்ற இணையதளங்களில் விலை உயர்ந்த பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும்,இது போன்று அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வரும் விளம்பரங்கள் அனைத்துமே போலியானது. கடந்த ஐந்து *அமேசானில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு, ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் வந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*
புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர்,புதிய லேப்டாப் வாங்க அமேசான் இணையதளத்தில் தேடி பார்த்து உள்ளார். அப்பொழுது ரூபாய் 1,15,000 மதிப்புள்ள லேப்டாப்பை ஆர்டர் செய்து பணத்தை அனுப்பி உள்ளார். 3 நாட்களுக்கு பிறகு அவருக்கு கொரியர் மூலம் லேப்டாப் வந்துள்ளது. அதனை பிரித்துப் பார்த்தபோது அவர் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதிலாக ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள விலை குறைவான லேப்டாப் வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அமேசான் கஸ்டமர் கேர் மற்றும் புதுச்சேரி அமேசான் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்,இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,வாட்ஸ் அப், யூடியூப் போன்ற இணையதளங்களில் விலை உயர்ந்த பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும்,இது போன்று அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வரும் விளம்பரங்கள் அனைத்துமே போலியானது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் இதுபோன்று 12 புகார்கள் பெறப்பட்டு விசாரித்துக் கொண்டு உள்ளனர். ஆகையால் இணையதளம் மூலம் நீங்கள் பொருட்கள் வாங்க விரும்பினால் Flipkart, Meesho,Ajio, Tatacliq போன்ற நிறுவனங்கள் மூலம் வாங்கினால் ஏமாறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,இணைய வழி மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க
1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டும் இதுபோன்று 12 புகார்கள் பெறப்பட்டு விசாரித்துக் கொண்டு உள்ளனர். ஆகையால் இணையதளம் மூலம் நீங்கள் பொருட்கள் வாங்க விரும்பினால் Flipkart, Meesho,Ajio, Tatacliq போன்ற நிறுவனங்கள் மூலம் வாங்கினால் ஏமாறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும்,இணைய வழி மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க
1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக