முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உரிய அனுமதியின்றி செயல்படும் விடுதிகளை தடை செய்ய வேண்டும் - சுயேச்சை எம்எல்ஏ நேரு வலியுறுத்தல்

புதுச்சேரி நகரப்பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி திறக்கப்படும் தங்கும் விடுதிகளை தடை செய்ய வேண்டும் என சுயேச்சை எம்எல்ஏ நேரு வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில்,

புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட, உருளையன்பேட்டை தொகுதியில் பல தெருக்களில் தீடீர்,தீடீர் என்று தங்கும் விடுதிகள் அதிகளவில் திறக்கபடுகிறது. இப்படிப்பட்ட தங்கும் விடுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் ஏதுமின்றி திறக்கப்படுவதால் அங்கு தங்கும் நபர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. 

அதேநேரத்தில் அக்கம்பக்கம் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இப்படி தீடீர் என்று தோன்றும் தங்கும் விடுதிகளில் வாகனம் நிறுத்தும் வசதி ஏதுமில்லாததால் விடுதிகள் இருக்கும் தெருக்களிலேயே கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த தெரு பகுதியில் குடியிருப்பவர்களும், அந்தந்த தெரு வழியை பயன்படுத்தும் வாகனஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சண்டை, சச்சரவு நடைபெறுகிறது.

அதேபோல் இந்த விடுதிகளின் பயன்பாட்டுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் அதிகளவில் உபயோகபடுத்தப்படுவதால் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு கிடைக்ககூடிய மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரம் (Low Voltage) மற்றும் குடிநீர் பற்றாகுறை ஏற்படுகிறது. அதேபோல இப்படிப்பட்ட தங்கும் விடுதிகளில் இருந்து அதிகளவில் வெளியேறும் கழிவுநீரை முறையாக பாதாள சாக்கடையில் இணைக்காததால் தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடுவதுடன் அந்தந்த தெருக்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இப்படிப்பட்ட தங்கும் விடுதிகள் அதிகளவில் தொடங்கபடுவதால் அங்கு தங்கும் வெளி நபர்கள் குடி மற்றும் கஞ்சா போதையில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

 இதனால் பொதுமக்களுக்கும், அங்கு தங்கும் நபர்களுக்கும், விடுதி நடத்துவோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடுகிறது. 
மேலும் எந்த அடிப்படை வசதியும் இல்லமல் தொடங்கப்படும் தங்கும் விடுதிகளால் சுற்றுலா பயணிகளும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மற்றும் நகர பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகளை தடைசெய்ய வேண்டும். அதேநேரத்தில் புதியதாக தொடங்கவிருக்கும் தங்கும் விடுதிகளை தங்கள் துறையினர் ஆய்வு செய்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடம் போன்ற தேவையான அடிப்படை வசதிகள் அந்த தங்கும் விடுதிகளில் உள்ளதா என்பதை கண்டறிந்து அனுமதி அளிக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் நகராட்சி நிர்வாகம் கண்டிப்பாக Trade License (வணிக உரிமம்) வழங்கக்கூடாது. எனவே தங்கும் விடுதிக்கான விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...