புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சார்ந்த 15,415 மாணவ மாணவியர் தேர்வு எழுதிய நிலையில் 1677 மாணவ மாணவியர் தோல்வியடைந்து இருப்பதாக அறிகிறோம். இது கடந்த ஆண்டை விட தோல்வி சதவீதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
தேர்ச்சி விகிதாச்சாரம் குறைந்ததற்காக குழு அமைத்து விசாரணை நடத்தப்படுவதாக கூறி நடந்திருக்கும் தவறில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது கல்வித்துறை அமைச்சரகம்.
புதிய கல்விக் கொள்கை திணிப்பு, சிபிஎஸ்இ பாடத்திட்டம், முற்பட்ட சாதி இட ஒதுக்கீடு திணிப்பு என மோடி அரசு கொண்டுவந்த பாசிச திட்டங்களை புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் திணிப்பதில் காட்டிய அக்கறையை ,அரசு பள்ளிகளில் ஆர் எஸ் எஸ் பயிற்சி எடுத்தவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் , ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிக்கு நெருக்கடி தந்த பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காத கல்வித்துறை சனாதன முறைகளை பாதுகாக்க துடித்ததே தவிர அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான நேரத்தில் புத்தகம் வழங்காமல் அரசு பள்ளிகளில் உரிய ஆசிரியர்களை நியமிக்காமல் காலதாமத மாணவர் சேர்க்கையை செய்து இன்று குழு அமைப்பதாக நாடகமாடுவதை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் காரைக்கால் மாவட்டத்தில் பெருமளவில் மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளனர் இதனால் இன்று ஒரு மாணவன் தற்கொலை செய்து இறந்திருக்கிறான். இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுமட்டதாக அறிகிறோம் காரைக்கால் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளிகள் அதிக மாணவர் தேர்ச்சியை உருவாக்கி உள்ள போது அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை குறைந்ததற்கான காரணம் என்ன என்பது கல்வித் துறைக்கு தெரியாதா? . காரைக்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் புத்தகம் வழங்கப்பட்டதா? சீருடைகள் வழங்கப்பட்டதா? ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் பள்ளிகள் நடக்கிறதா? காரைக்கால் பகுதிக்கு பணி செய்வதற்காக ஆணை பிறப்பித்தும் பல ஆசிரியர்களை இங்குள்ள அரசியல் தலைவர்களின் சிபாரிசின் பேரில் புதுச்சேரியிலேயே வைத்துக்கொண்டு அரசு மாணவர்கள் தேர்ச்சி விகிதாச்சாரம் குறைந்துவிட்டதென்று நீலி கண்ணீர் விடுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததை நாம் அனைவரும் அறிவோம். இவை அனைத்திற்கும் காரணம் அரசு சனாதன மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வருவதில் காட்டிய முனைப்பு மாநில மாணவர்களின் கல்வி போதிப்பதில் காட்டவில்லை என எமது அமைப்பு குற்றச்சாட்டுகளை வைக்கிறது.
எனவே மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நடந்திருக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை ஏற்று தான் வகிக்கும் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது மேலும் நடப்பாண்டிலாவது மாணவர்களின் சேர்க்கையை துரிதமாக நடத்தி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் காலத்தோடு வழங்கி அவரது சீருடைகளை காலத்தோடு வழங்கி அவர்கள் சிறப்புற கல்வி பயின்று, வரும் கல்வி ஆண்டில் ஆவது புதுச்சேரி மாநிலம் சிறப்பான மாணவர் தேர்ச்சியை உருவாக்க கோரிக்கை வைக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக