முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜக கூட்டணியில் இருந்து முதல்வர் ரங்கசாமி வெளியேற வேண்டும் ; சிபிஎம் வலியுறுத்தல்.!

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தென்னிந்தியாவின் கறையாக பிஜேபி கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
பாஜக கட்சிக்கு அரசியல் நேர்மையும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் எப்போதும் இருந்ததில்லை. எதிர்க்கட்சி மாநில அரசுகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியை கைப்பற்றுவது ,கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி சொந்த பலத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் வஞ்சகமும், துரோகமும் கொண்ட ஆக்டோபஸ் போன்றது.

கர்நாடக மக்கள் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வைத் தீர்மானகரமாக நிராகரித்திருக்கிறார்கள். பாஜகவிற்கு இந்தத் தோல்வி, பாஜக அரசாங்கத்தின் ஒட்டுமொத்த தவறான ஆட்சி மற்றும் ஊழலின் விளைவாகும். மேலும் கர்நாடகா மக்கள் அளித்த இந்த தீர்ப்பானது , பிரதமர் மோடியே தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கொண்ட விஷத்தைக் கக்கிய மதவெறிப் பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்திருப்பதையும் காட்டுகிறது. மக்கள் மத்தியில் பாஜக ஆட்சிக்கு எதிராக இருந்த கடும் எதிர்ப்பு உணர்வு, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றியுடன் வெற்றிபெற வாய்ப்பளித்திருக்கிறது.

ஒன்றிய மதவெறி, கார்ப்பரேட் கூட்டுக் களவாணித்தனத்தின் மொத்த உருவமான பாஜக 2016 முதல் 2021 வரை ஆட்சியிலிருந்த புதுச்சேரி திரு நாராயணசாமி அரசை அனைத்து வகையிலும் தடுத்து நிதி ஒதுக்காமலும் ஏமாற்றியது. கிரண்பேடியோ மக்கள் நலத் திட்டங்களை முடக்கி வைத்ததோடு போட்டி அரசை நடத்தி புதுச்சேரியின் வளர்ச்சியை ஐந்தாண்டுக்கு நிறுத்தியே வைத்து விட்டார். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.

திரு.என்.ரங்கசாமி தான் எப்படியாவது முதல்வராக இருந்தால் போதும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், புதுச்சேரி எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் விரும்பாத பாஜக கட்சியோடு கூட்டணி வைத்து இல்லாத கட்சியை உருவாக்கக் காரணமாகிவிட்டார்.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பதவி வெறியும் பிடித்த மக்கள் சொத்தை கொள்ளை அடித்து வைத்திருந்த சில சட்டமன்ற உறுப்பினர்களையும் கொலை கொள்ளை வழிப்பறி ஆள் கடத்தல் நில அபகரிப்பு போன்ற கொடும் குற்றங்களைச் செய்த ரவுடிகளையும் பிஜேபி கட்சியில் சேர்த்து ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கொடுத்து அதன் மூலம் 6 சட்டமன்ற உறுப்பினர்களை புதுச்சேரியில் பெற்று விட்டது. மேலும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களை பணம் கொடுத்தும் பதவி ஆசை காட்டியும் தங்களது ஆதரவாளராக மாற்றி ரங்கசாமியை மிரட்டி வருகிறது.

புதுச்சேரியின் மக்கள் சொத்தான மின்துறை விற்க, பஞ்சாலைகளை விற்க, சர்க்கரை ஆலையை விற்க, கூட்டுறவு நிறுவனத்தின் இடங்களை விற்க, கடற்கரையை இயற்கை வளங்களை கார்ப்பரேட்களிடம் அடகு வைக்க, பிஜேபி. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு துடிக்கிறது.அரசு இயந்திரத்தை, கல்வித்துறையை காவிமயமாக்கி மதவெறி நிகழ்ச்சியை நேரடியாக அரங்கேற்றத் தொடங்கியுள்ளது. ரேஷன் கடைகளை மூடி வைத்துள்ளது, ஆயிரக்கணக்கான அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஆண்டு கணக்கில் சம்பளம் இல்லாமல் நிறுத்தி வைத்துள்ளது. நன்றாக இயங்கிக் கொண்டிருந்த பிஆர்டிசி நிறுவனத்தை கூட மூட பார்க்கிறது. அமைதியான புதுச்சேரியில் கூடுதலாக 500 ரெஸ்ட்ரோ பார்களை உருவாக்கி மக்கள் நிம்மதி கெடுத்துள்ளது.

இதையும் பாருங்கள்:

கஞ்சா கும்பலின் தலைமை இடமாக மாறிய எதிர்க்கட்சித் தலைவரின் தொகுதி.! அதிமுக குற்றச்சாட்டு.!

https://fb.watch/kwf3W6KGtc/?mibextid=Nif5oz

தென்னிந்தியாவின் கறையாக புதுச்சேரியில் மட்டும் தற்போது கூட்டணியில் இருப்பது புதுச்சேரி மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. போராட்டப் பாரம்பரியமும் மதங்களைக் கடந்த மக்கள் ஒற்றுமை நிலவும் புதுச்சேரி மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க பிஜேபி கட்சியைப் புதுச்சேரியில் இருந்து அகற்றுவோம். திரு என். ரங்கசாமி அவர்கள் பிஜேபி கூட்டணியிலிருந்து இருந்து உடனே விலகி வெளியேற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...