புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
மலிவு விளம்பர அரசியலுக்காக முதலமைச்சர் மற்றும் ஆளுநரை தரம் தாழ்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் விஷ சாராயம் அருந்தி 23-க்கும் மெற்பட்டவர்கள் மரணமடைந்த நிகழ்வுக்கு தமிழக திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க அருகதையற்றவர் ஆவார். உண்மைநிலை இவ்வாறு இருக்க முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற விதமாக புதுச்சேரி முதலமைச்சரை பற்றியும், துணைநிலை ஆளுநரை பற்றியும் திட்டமிட்டு தவறான தகவல்களை எடுத்துக்கூறி திமுவின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை காப்பாற்றும் விதத்தில் தொடர்ந்து நாராயணசாமி பேசி வருகிறார்.
அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட, தேர்தலில் நிர்காமல் ஓடி மறைந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் வீண் விளம்பர பொய்யான அறிக்கைகளுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதிலளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக சார்பில் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். நாராயணசாமியின் பொய், பேச்சுகளுக்கு துணைநிலை ஆளுநர் அவர்கள் தொடர்ந்து பதிலளிப்பதால் புதுச்சேரியில் அரசியலில் விரும்பத்தகாத வீண் சச்சரவுகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் மக்கள் நலன் சார்ந்த திட்ட பயன்கள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. எனவே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தவறான விரும்பத்தகாத அறுவறுக்கத்தக்க அனாகரீகமான பொய்யான தகவல்களுக்கு துணைநிலை ஆளுநர் பதிலளிப்பதை நிறுத்திகொள்ள வேண்டும்..
புதுச்சேரியில் தொடர்ந்து தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் எந்த அரசாக இருந்தாலும் தொடர்ந்து தவறை இழைத்து வருகிறது. புதுச்சேரியில் ஏற்கனவே செயல்பட்ட 4 நிகர்நிலை பல்கலைக்கழத்தில் 20 சதவீத அரசு இடஒதுக்கீடாக பெறப்பட்டு வந்தது. கடந்த கால திமுக காங்கிரஸ் அரசு கையூட்டு பெற்றுக்கொண்டு அனைத்து சீட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் 3 தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்தமுள்ள 450 இடங்களில் சட்டப்படி 50 சதவீதம் 225 இடங்களை அரசு இடஒதுக்கீடாக பெற வேண்டும். மேலும் இந்த ஆண்டு ஒரு மருத்துவ கல்லூரிக்கு 100 சீட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய மருத்துவ கவுன்சில் 2020-ன் அறிவிப்பின் படியும், சுப்ரீம் கோரட்டின் உத்தரவின் அடிப்படையில் மாநில அரசுக்கு தனியார் மருத்துவ கல்லூரி 50 சதவீதம் இடத்தை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு மருத்தவ கல்லூரியில் என்ன கட்டணம் பெறப்படுகிறதோ அதே கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் 50 சதவீதம் இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 275 இடங்களை பெற வேண்டும் என ஒரு உத்தரவு போட வேண்டும். அதைவிடுத்து மருத்துவ கல்லூரி உரிமையாளர்களை அழைத்து பேசுவது சரியானது அல்ல.
ஆளுநர் தமிழிசை பேசும்போது முதலமைச்சருடன் இணக்கமாக செயல்படுகின்றோம் என்று கூறி வருகிறார். அவர் ஒரு மருத்துவர் என்பதால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சதவீத இடங்களை பெற ஒரு அவசர உத்தரவினை போட வேண்டும். அப்படியில்லை என்றால் அவரும் தனியார் மருத்துவ கல்லூரிக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற நிலைபாடு மக்கள் மத்தியில் தோன்றும்.
தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 3000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர்.
எனவே அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
அப்படி இல்லை என்றால் கூட்டணி கட்சி என்று பாராமல் கழகத்தின் அனுமதி பெற்று அரசை எதிர்த்தும், அரசின் தவறான செயல்பாட்டை கண்டித்து அதிமுக சார்பில் மாணவர்களுக்காக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக