முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமைச்சர் சாய் சரவணனை கண்டித்து முற்றுகை.! ஏஐடியுசி எச்சரிக்கை.!

ஏஐடியூசி புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாப்ஸ்கோ ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தியும் நிறுவனத்தைத் திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து அனைவருக்கும் வேலை வழங்கி மாதம் தவறாமல் சம்பளம் வழங்க வலியுறுத்தியும் பல கட்ட போராட்டங்கள் பாப்ஸ்கோ ஊழியர்கள் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டத்தின் போது துறையின் அமைச்சர் சாய் சரவணகுமார் அவர்கள் தொழிற்சங்கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி நிலுவை சம்பளம் வழங்கி நிறுவனத்தை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மீண்டும் போராட்டத்தை துவங்கிய பாப்ஸ்கோ ஊழியர்கள்
20.3.2023 அன்று உயிரை பணயம் வைத்து கடலில் இறங்கி போராடினார்கள் இந்த போராட்டத்திற்கு பிறகு முதலமைச்சர், தலைமைச் செயலர், துறையின் செயலர் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய போது பாப்ஸ்கோ பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வருவதற்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி கூடி அரசுக்கு அறிக்கை கொடுப்பார்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் முதல் முறையாக ஐந்து பேர் கொண்ட கமிட்டி 29.3.2023 அன்று கூடியது இதனை தொடர்ந்து மீண்டும் 10.4.2023 அன்று இரண்டாவது முறையாக கமிட்டி கூட்டம் நடைபெற்று அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சர் சாய் சரவணன் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அமைச்சர் அவர்கள் படித்து பார்த்து தேவையென்றால் அவரின் கருத்தை பதிவு செய்து முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டும். வந்த கோப்பை அமைச்சர் அவர்கள் தங்கள் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருக்கிறார். இதனால் முதலமைச்சர் அவர்கள் பாப்ஸ்கோ சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக அமைச்சர் அவர்கள் கோப்பினை ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியும் காலம் கடத்தினால் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்