முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்று அறிவிப்புகள் எல்லாம் சாதனையாகாது.! புதுவை அரசுக்கு திமுக கண்டனம்.!

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வௌியிட்டுள்ள அறிக்கையில்,


அரசின் சாதனைகள் என்பது அந்த அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களை குறிப்பிடலாம். அரசின் வெற்று அறிவிப்புகள் எல்லாம் சாதனைகளாகாது. புதுவை அரசின் சாதனைகளாக முன்வைக்கப்பட்டவை வெற்று அறிவிப்புகளே தவிர சாதனைகள் அல்ல.
திட்டமிட்ட வளர்ச்சி என்பதே மாநிலத்தின் எழுச்சியாகும். அந்த வகையில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், புதுமை பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், மாணவிகளுக்கு மாதம் ரூ 1000, இளைஞர்களுக்கு 4 லட்சம் வேலை, வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு, விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் என ஏழை, எளிய விளிம்புநிலை மக்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, பட்டியலின, பழங்குடி மக்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலன் காக்கின்ற திட்டங்களை இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த அரசும் செய்திடாத சாதனைகளைச் செய்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருப்பதை திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் எங்கள் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈராண்டுச் சாதனையாக பட்டியலிட்டுள்ளார். அதனை அனைவரும் வரவேற்கின்றனர்.
அதைவிடுத்து நிதி ஆதாரம் ஏதுமில்லாமல் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளை தமது அரசின் ஈராண்டு சாதனையாக புதுச்சேரி அரசு வௌியிட்டிருப்பது அரசின் செயலற்ற தன்மைக்கே சாட்சியாக உள்ளது. நிதி ஒதுக்கீடே இல்லாத திட்டங்களை எல்லாம் முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.

மாதம்தோறும் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என முதல் அமைச்சர் அறிவித்தார். அதற்கு எங்கே நிதி.? வேலை வாய்ப்புக்கு தொழில்நுட்ப பூங்கா எங்கே.? காணவில்லை. காங்கிரஸ் – திமுக ஆட்சியில் வேலையிழந்தவர்களுக்கு வேலை என்றார். எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்.? 
உலக தமிழ் மாநாடு எப்போது? தமிழ் மொழிக்கான மொழியியல் பண்பாட்டு நிறுவனம் இன்று மூடுவிழா கண்டுள்ளது. ஏழை மகளிருக்கு அறிவித்த மாத தொகை முதல் மாதம் வழங்கியதோடு காலாவதியானது. புதிய சட்டமன்றம், மேம்பாலம் எங்கே.? அரசின் பழைய கடன் தள்ளுபடியானதா.? நிதிக்குழுவில் புதுவை அரசு இணைக்கப்பட்டதா.? ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடருமா.? 10 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டதா.? கூட்டுறவு நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டதா.? எதையும் இந்த அரசு செய்யவில்லை.

ஆனால் உண்மையான சாதனைகளை பட்டியலில் சேர்க்காமல் இந்த அரசு மறந்துவிட்டது. அதை நினைவு படுத்துகிறோம். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்கள், இந்தியாவிலேயே பெண்களுக்கு என்று தனி மது பார், இளைஞர்களும், மாணவர்களும் போதையில் மூழ்கியிருக்க புதுச்சேரியில் கஞ்சா விற்பனை, புதிதாக 6 மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அனுமதி, லாபத்தில் இயங்கிய மின்துறையை தனியாருக்கு விற்பனை, காரைக்கால் துறைமுகம் அதானிக்கு தாரைவார்த்தல், கூட்டுறவு சர்க்கரை நூற்பாலை தனியாருக்கு ஏலம், மாணவர்களுக்கு உப்பு சப்பு இல்லாத அட்சபாத்திரா மதிய உணவு, 100 நாள் வேலைத்திட்டம் 5 நாள் வேலையாக சுருங்கியது, ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் சாப்பாடு இல்லாத அவல நிலை, சிறப்புக்கூறு நிதி ரூ. 166 கோடி செலவு செய்யாமை, இவற்றை எல்லாம் சாதனை பட்டியலில் சேர்க்காதது ஏன்.?

புதுச்சேரி மக்கள் என்றைக்கும் விழிப்பாணவர்கள். அவர்களை ஏமாற்றுவதை விடுத்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தும் போது அதனை நாங்கள் வரவேற்க தயங்க மாட்டோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...