முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஷ சாராய கடத்தல் கேந்தரிமாக மாறியுள்ள புதுச்சேரி..! அதிமுக குற்றச்சாட்டு.!

புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,


புதுச்சேரியின் அண்டை மாநில பகுதியான எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 15 மீனவர்கள் பலியாகியுள்ளனர். புதுச்சேரியை ஆளும் முதலமைச்சர், இந்த சம்பவம் குறித்து தமிழ்நாட்டில் விசாரிக்கின்றனர், புதுச்சேரியில் கண்காணிக்கின்றனர், முழு தகவல்கள் கிடைத்தவுடன் சொல்கிறேன், புதுச்சேரி கலால் துறை ரூ.1,330 கோடி வருவாய் ஈட்டித்தந்துள்ளது என மிகுந்த அலட்சியத்தோடும், சர்வாதிகார போக்கோடும் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் தன் மீது எந்தவித பழியும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, பலி ஆடாக கலால்துறை துணை ஆணையரை இடமாற்றம் செய்துள்ளார்.

இப்போது கள்ளச்சாராயம் மட்டுமல்ல, விஷத்தன்மை கொண்ட மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் என்ற உயிரை கொல்லும் விஷ சாராய கடத்தல் கேந்திரமாக புதுச்சேரி மாறியுள்ளது, புதுச்சேரியிலிருந்து பல ஊர்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. இந்த மெத்தில் ஆல்கஹால்தான் 15 பேர் உயிரை குடித்துள்ளது.

இரவு நேர கவர்ச்சி நடன பார்களால் விபரீதம் ஏற்படும் என எச்சரித்தோம், இதை மீறியதால் அப்பாவி பொறியியல் பட்டதாரி இளைஞர் பலியானார். இரவில் பெண்கள் நடுரோட்டில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது. இப்போது புதுச்சேரியிலிருந்து சென்ற மெத்தில் ஆல்கஹால் கலந்த விஷ சாராயத்தை குடித்து 15 மீனவர்கள் இறந்துள்ளனர். இதன் எதிரொலியாகத்தான் கலால்துறை இணை ஆணையர் இடமாற்றம் செ ய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் தனது தவறான மதுபான கொள்கைகளால், தன்னுடைய கஜானாவுக்கு நிதி கிடைக்கிறது என்பதற்காக அப்பாவி உயிர்களை பலியிடுவது மிகப்பெரிய பாவம் என்பதை உணராமல் செயல்படுகிறார்.

முதியோருக்கு உதவி செய்கிறோம், ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் செய்கிறோம், ஆன்மிக கடவுளுக்கு பட்டாலும், பொன்னாலும் அலங்காரம் செய்கிறோம், நமக்கு என்ன பாவம்? எல்லாத்தையும் சாமி பார்த்துக்கொள்வார் என்ற மமதையோடு வாழும் காமராசர் செயல்படுவது ஆணவத்தின் உச்சகட்டம். தடையில்லாத தாராளமய மதுபான கொள்கையாலும், நிர்வாக திறமை இன்மையாலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வேதனைக்கும், வயிற்றெரிச்சலுக்கும், முன்னால் எந்த பரிகாரமும் எடுபடாது, எந்த பாவமும் குறைந்துவிடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எஸ்பி மீது பெண் எஸ்ஐ பாலியல் புகார்.!

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் துறையாக காவல்துறை இருக்க வேண்டும். சமீபகாலமாக காவல்துறையில் நடைபெறும் தொடர் தவறினால் காவல்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் புறநகர் பகுதியாக இருக்க கூடிய வில்லியனூர், காட்டேரிக்குப்பம், திருக்கனூர், பாகூர், நெட்டப்பாக்கம், திருபுவனை, சேதராப்பட்டு, மங்கலம், கரிக்கலாம்பாக்கம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. பல்வேறு காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் தனி ராஜ்ஜியமே நடத்துக்கின்றனர்.           தடையற்ற போதை பொருள் விற்பனை, போலீ மதுபானம் தயாரித்தல், ஆற்று மணல் கடத்தல், கட்ட பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்கள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகாலமாக மேற்கூறிய காவல் நிலையங்களிலேயே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ஜாதியின் அடிப்படையில் கோளோச்சி வருகின்றனர்.           காவல்துறை...

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் விலகல்

புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நான் நமது கழகத்தில் 40 ஆண்டிற்கு மேலாக கழக உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் புரட்சித்தலைவி மாண்புமிகு.அம்மா அவர்களால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன். மேலும் மாண்புமிகு.அம்மா அவர்கள் அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுச்சேரி மாநில நகராட்சியில் கவுன்சிலராகவும், இரண்டு முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன். மேலும் 2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் பேட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள். நான் தொடர்ந்து கழக பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுச்சேரி மாநில கழக செயலாளர் திரு.அன்பழகன் Ex.MLA அவர்கள் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள். மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கழக வளர்ச்சிக்கும் வார்டு மற்றும...

போலி மருந்து விவகாரம்; நிர்மலா சீத்தாராமனை விசாரிக்க கோரிக்கை

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த போலி மருந்து தொழிற்சாலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முறையான விசாரணையை நடத்தி வருவதை பாராட்டுகிறோம் அதே நேரத்தில் இந்த விசாரணையில் நாடு எங்கும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதோடு சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு சில முக்கிய தலைவர்களின் தலையீடு மற்றும் அழுத்தத்தின் காரணமாக நடந்து வரும் உண்மை விசாரணை தடுக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு நமச்சிவாயம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேவை ஏற்பட்டால் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துவோம் என தெரிவித்தார் இதனை எமது அமைப்பு வரவேற்கிறது இந்த விசாரணைக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தயாராக இருப்பார் எனவும் கருதுகிறது. மேலும் புதுச்சேரி மாநில மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம் மற்றும் பாஜக உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்டியார் இவர்களுடன் ...