புதுச்சேரி மாநில அதிமுக துணை செயலாளர், Ex.Mla., வையாபுரி மணிகண்டன் மேதகு துணை நிலை ஆளுநரிடம் அளித்துள்ள மனுவில்,
புதுச்சேரி மாநிலத்தில் ஏழை, எளிய, நடுத்தர, பட்டியலின மாணவர்களும் மருத்துவக்கல்வி படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தாங்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த உயர்ந்த நோக்கம் எக்காரணம் கொண்டும் சிதைந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மேதகு துணை நிலை ஆளுநருக்கு உண்டு.
தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதுச்சேரியிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. *தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. பூகோளரீதியில் பல்வேறு பிராந்தியமாக பிரிந்துள்ள புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தையும், மாகே கேரளா பாடத்திட்டத்தையும், ஏனாம் ஆந்திர மாநில பாடத்திட்டத்தையும் பின்பற்றி தேர்வு எழுதியுள்ளனர்.Follow This Facebook Page
அனைத்து பிராந்தியங்களும் சமமான வளர்ச்சி காண வேண்டும் என்பதற்காக புதுச்சேரிக்கு 75, காரைக்கால் 18, ஏனாம் 4, மாகே 3 என்ற சதவீதத்தில் பிராந்திரீதியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடு முறையை தற்போது வழங்கப்பட உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஒரே பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் முழுமையாக அரசு பள்ளி மாணவர்களின் இடஒதுக்கீடை பெறும் அபாயம் ஏற்படும். புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்து ஏழை, எளிய, பட்டியலின மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
எனவே இதுகுறித்து மேதகு துணை நிலை ஆளுநர் அவர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து பிராந்திய மாணவர்களும் சமமாக பயன்பெறும் வகையில், பிராந்திய ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக