இந்தியாவிலேயே முதல் முறையாக, புதுச்சேரி அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய வகுப்பறை துவக்கம்!
இந்தியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரி அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய வகுப்பறை துவக்க விழா நடைபெற்றது
புதுவை கல்வித்துறை மற்றும் சத்யா சிறப்பு பள்ளி இணைந்து இந்தியாவில் முதல் முறையாக அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கிய மாதிரி வகுப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி புதுப்பேட்டை கோலகார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அனைத்து குழந்தைகளும் இணைந்து கற்கும் சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பு மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். விழாவில் சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஷா வரவேற்புரை வழங்கி, திட்டத்தின் நோக்கம் பற்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நலத்துறை செயலர் உதயகுமார், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கௌடு, சமூக நலத்துறை பத்மாவதி,இணை இயக்குநர் நடனசபாபதி, மகளிர் கல்வி தினகர், திட்ட இயக்குனர், சமகிரக சிக்க்ஷா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக