விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் இரா.தமிழ்வாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
புதுச்சேரி அரசுக்கு சொந்தமான மின் துறையை அதானிக்கு விற்று லாபம் கொழிக்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜூலை 7ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.அரசுக்கு எதிரான இந்தப் பேரணியை எழுச்சியோடு நடத்திக் காட்ட பாகூர்,ஏம்பலம், மணவெளி ஆகிய தொகுதிகளை சார்ந்த விசிக நிர்வாகிகள் கூட்டம் பாகூரில் நடைபெற்றது.
மனவெளி தொகுதி செயலாளர் வெண்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்கள் பொருளாளர் தமிழ்மாறன்,மாநில செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ஜூலை 3,4 ஆகிய தேதிகளில் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை பாகூர்,ஏம்பலம்,மணிவெளி ஆகிய தொகுதிகளில் முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.அதேபோல் இம்மூன்று தொகுதிகளில் இருந்து சுமார் 1000 பேர் அப்பேர் அணிகள் பங்கேற்பு என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஏம்பலம் தொகுதி பொறுப்பாளர் செந்தமிழன்,பாகூர் தொகுதி செயலாளர் பாண்டியன்,மாநில பொறுப்பாளர்கள் தமிழ் வளவன்,குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மனவெளி பாகூர் ஏம்பலம் ஆகிய தொகுதிகளை சார்ந்த முகாம் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக