ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ சேகர் தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 52 பிறந்தநாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில், ராகுல் காந்தி தேசிய பேரவை மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவர் ஆர்.இ சேகர் மற்றும் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக, மணக்குள விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு,தங்க தேர் இழுக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன்,கார்த்திகையன், பாலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து,இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை,முல்லா வீதியில் உள்ள தர்க்காவில் சிறப்பு தொழுகை செய்யப்பட்டு, நிர்மலா சிசுபவனில் உள்ள குழந்தைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் பேபி சாரா இல்லத்தில் கேக் வெட்டி, இனிப்பு மற்றும் உணவு வழங்கிய காங்கிரசார், விழாவின் நிறைவாக ஒஸ்பிஸ் முதியோர் இல்லத்தில் மாலை உணவு வழங்கினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக