முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய மருத்துவர்கள் தினம்; முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மருத்துவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய அருந்தொண்டை போற்றிப் பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உயிர் காக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டுள்ளதால்தான் மருத்துவர்கள் வாழும் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, குடும்பத்தைப் பிரிந்து, தன்னலமற்று, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது அவர்கள் ஆற்றிய சேவை என்றும் போற்றுதலுக்குரியது.

இந்த தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள்