முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலி மதச்சார்பின்மை பேசும் திமுக! அன்பழகன் கண்டனம்!

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது 
புதுச்சேரி மாநிலத்தில் போலி மதச்சார்பின்மை பேசும் கடந்த கால திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வஃக்பு வாரியத்திற்கு உறுப்பினர்களைக் கூட நியமனம் செய்யாமல் முஸ்லிம் மக்களுக்கு மிக பெரிய துரோகத்தை செய்தனர். அவர்களது ஆட்சியில் ஐந்தாண்டு காலம் முழுமையாக வஃக்ப் வாரியம் அமைக்காமல் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு தூரோகம் இழைத்தனர். இதனால் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அரசு மூலம் எந்தவிதமான பயனும் அடைய முடியாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தில் வஃக்பு வாரியம் அமைக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள வழக்கறிஞர்களில் ஒருவரை தேர்தல் மூலம் வஃக்பு வாரியத்தின் உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த திரு சையது அகமது மொய்தீன் என்ற வழக்கறிஞர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு அவருக்கு அதற்குரிய அரசின் அங்கீகாரத்தை வழங்காமல் தவறு செய்தனர்.

 இந்நிலையில் வஃக்பு வாரிய வழக்கறிஞர் பிரிவு உறுப்பினராக தேர்தலில் வெற்றிபெற்ற திரு. சையது அகமது மொய்தீன் என்பவர்க்கு உரிய அரசின் அங்கீகாரத்தை வழங்கவேண்டுமென புதுச்சேரி மாநில முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்களிடம் அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்கள் கோரிக்கையை ஏற்று சில நாட்களுக்கு முன்பு கழகத்தை சேர்ந்த திரு. சையது அகமது மொய்தீன் என்பவருக்கு அரசு அங்கீகாரம் வழங்கியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த திமுக.காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்படாமல் இருந்த அரசு அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு திரு ரங்கசாமி அவர்களை அதிமுக சார்பில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டோம்.

 அப்பொழுது கழகத்தின் சார்பில் தேர்தல் மூலம் வழக்கறிஞர் பிரிவின் வஃக்பு வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. சையது அகமது மொய்தீன் அவர்களை வஃக்பு வாரிய தலைவராக அரசு பொறுப்பு அளிக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள்