முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிருபர் மீது பாமகவினர் தாக்குதல்!, மாணவர் கூட்டமைப்பு கண்டனம்;

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுச்சேரி மாநிலத்தில் இன்று மாலை நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் நியூஸ் தமிழ் ஊடகவியலாளர் கிருஷ்ணா அவர்கள் மீது பாமக தொண்டர்கள் நடத்திய தாக்குதலை புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது

இந்திய நாட்டின் நான்காம் தூண் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு தொடர்ச்சியான பாதுகாப்பற்ற நிலை தொடர்வது என்பது வேதனைக்குரியது பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களின் மதிப்பு என்ன என்பதை தொண்டர்களுக்கு சொல்லி வழி நடத்தாது வருத்தத்துக்குரியது

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய பாமகவினர் மீது புதுச்சேரி அரசு உடனடியாக உரிய வழக்கினை பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எமது அமைப்பின் சார்பில் வைத்துக் கொள்கிறோம்

கருத்துகள்