நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது ரசிகர் ஒருவர் ஒரு நாள் முழுவதும் இலவச ஆட்டோ சேவை செய்துவருவது விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் அருகே உள்ள கந்தன்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். கிருமாம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
தீவிர விஜய் ரசிகரான மணிகண்டன் தனது ஆட்டோவில் விஜய் படம் மற்றும் விஜய் வசனங்களை எழுதி உள்ளார். மேலும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் தனது ஆட்டோவில் பயணம் செய்பவர்களை இலவசமாக அழைத்து சென்று வருகிறார். மணிகண்டனின் இந்த சேவை விஜய் ரசிகர்கள் மத்தியிலும் அப்பகுதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக