அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் தமிழ் வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் சுமார் 100-கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹோல்சேல் பார்களும் உள்ளன. அதிலும் ரெஸ்டோ பார்கள் மீது இளைஞர்கள் மிகுந்த மோகம் கொண்டுள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து வரும் இளைஞர்கள் ஒரு பக்கம் என்றால், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு ஈடாகவே ரெஸ்ட்ரோ பார்கள் மீது மோகம் கொண்டுள்ளனர்.
ரெஸ்ட்ரோ பார்களில் மது ஒரு புறம் என்றால் கஞ்சா மறுபுறம் எளிமையாக கிடைக்கிறது.இதை தடுக்க வேண்டிய காவல்துறையினரே சிலர் சனிக்கிழமை இரவு நேரத்தில் ரெஸ்டோ பார்களுக்குள் சென்று மாமூல் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.
ஒருபுறம் கலாச்சார சீர்கேடு என்றாலும் மறுபுறம் ரவுடிகளின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது.ரெஸ்ட்ரோபார்களின் உரிமையாளர்களாக இருப்பவர்கள் அரசியல் பின்புலத்தில் தங்களுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர், முன்னால் மந்திரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை தெரியும் என அரசியல்வாதி பெயர்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி
எனக்கு பிரபல தாதாக்களை தெரியும்
, நான் நேரடியாக உதவி ஆய்வாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசுவேன் என்று கேள்வி கேட்பவர்களை மிரட்டுகிறார்கள்.
நகரத்தின் முக்கிய ரெஸ்ட்ரோ பார்கள் விடியற்காலை 2 மணி வரை செயல்படுவதால் அருகாமையில் வாழும் குடும்பங்களுக்கு இது மேலும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் அரசாங்கம் அறிய வேண்டும்
இதனால் வாரம் சனிக்கிழமை ஆனால் இளைஞர்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தேவைப்படுகிறது..
அந்தப் பணத்திற்காக பெற்றோர்களை மிரட்டி அல்லது கந்து வட்டிக்கு கடன் வாங்கி பெருமைக்கென ரெஸ்ட்டோ பார்களை தேடி வருகின்றனர்..
ஒருபுறம் நகரத்தில் வாழும் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்றால் கிராமத்தில் வாழும் இளைஞர்களையும் சீரழிக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள்..
எனவே புதுச்சேரி இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து ரெஸ்ட்ரோ பார்களையும் உடனடியாக இரவு 10 மணி வரை மட்டுமே நடத்த கட்டுப்பாடு கொண்டு வருவதோடு, எதிர்காலத்தில் ரெஸ்டோ பார்களை முழுமையாக மூடுவதற்கும்,புதுச்சேரி இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக