புதுச்சேரி அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோ.தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் தற்போது வருடத்திற்கு சுமார் 30,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்கும் வகையில் வேலை தேடி வருகின்றனர். இளைஞர்கள் பொறுப்போடு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் புதுச்சேரியில் அதற்கான ஐடி நிறுவனங்களோ அல்லது அதற்கேற்ப தொழில் நிறுவனங்களோ அல்லது மிகப்பெரிய தொழிற்சாலைகளோ இல்லை. அதனால் வேலைவாய்ப்புக்காக அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பெங்களுர் போன்ற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கம் சென்று வேலைவாய்ப்பை தேடுகின்றனர். ஒரு பக்கம் வேலை தேடுவதற்கு ஆகும் செலவே அவர்களை சோர்வடையச் செய்கிறது. சிலருக்கு வேலையே கிடைக்காமல் கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர்.
அப்படியே வேலை கிடைத்தாலும் வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கான மரியாதை இருப்பதில்லை. பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் மனரீதியாக பாதிப்பிற்குள்ளாகின்றனர். அதிலும் பெண்கள் பாதுகாப்பு கருதி புதுச்சேரியிலே மிக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இளைஞர்களே வருங்கால இந்தியா என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே மாநில வளர்ச்சி பெரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆளுகின்ற அரசானது இருக்கின்ற ஆறு மாத ஆட்சியிலாவது இளைஞர்களுக்காக ஐடி பார்க் கொண்டுவதற்கான திட்டத்தை தொடங்கினால் அவர்கள் பிறந்த மாநிலத்திலேயே வேலை செய்யும் சூழல் உருவாகும். குடும்பத்தினருடனும் நாட்களை மிகழ்ச்சியாக கழிக்க கூடும். இதை சாதாரண பிரச்சினையாக மனதில் கொள்ளாமல் உடனடியாக அரசு தேர்வு செய்துள்ள இடத்தில் ஐடி பார்க் கொண்டுவரவும், பல்வேறு தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வரவும் வழிவகை செய்து புதுச்சேரியில் கல்லூரி படிப்பு படித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு புதுச்சேரியிலேயே வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் இளைஞர்களின் எதிர்காலத்தை ஆளும் அரசு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக