*ஸ்ரீ துலுக்கானத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வர் திருக்கோவில் நடைபெற்ற திருவாசக முற்றோதல் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.டி ஆறுமுகம்,பாஜக நிர்வாகி வருண் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்*
புதுச்சேரி கோவிந்தசாலை- கல்வி பங்களா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் திருக்கோவில் திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது.
தில்லை சிவபுரத்து அரசன் சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் சிவானந்த மணிவாசகர் திருக்கூட்டம் சார்பில் சிவ.ஜெயசங்கரர் மற்றும் சிவ கல்யாணி அம்மா தலைமையில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம் வருண், என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஓம் சக்தி ரமேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து முற்றோதல் நிகழ்வில் பங்கேற்ற சிவனடியார்களுக்கு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் வருண், சால்வை அணிவித்து, அன்னதானம் உபயம் செய்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செய்திருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக