சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி தேசிய பேரவை சார்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது
புதுச்சேரி பிரதேச ராகுல்காந்தி தேசிய பேரவை மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி ஊடகப் பிரிவு சார்பாக 75வது ஆண்டு சுதந்திர தினம்,வண்ண அருவி கலைக்கூடத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பள்ளி மாணவ மாணவிகளிடையேதேசப்பற்றை வளர்க்கும் விதமாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. ஓவிய போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு ராகுல்காந்தி தேசிய பேரவை தலைவர் RE. சேகர் மற்றும் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் திருவேங்கடம் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் அசோகன், தனக்கோடி புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பிரபு,அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் ராஜேந்திரன், கலைமாமணி ஓவியர் அன்பழகன், ஓவியர்கள் மாறன், தமிழ்ச்செல்வி, மணிமாறன், வண்ண அருவி ஆர்ட் கேலரி உரிமையாளர் ராஜேஷ், ஓவிய ஆசிரியர் சக்திதாசன், சமூக சேவகர் கஜேந்திரன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக